Share on Social Media

தந்தையின் முட்டுக்கட்டையையும் தாண்டி பூஜாவின் கனவு அவரை முன்னகர்த்தி சென்றது. பாக்ஸிங் ரிங்கில் எதிராளியிடம் வாங்கிய குத்துகளினால் ஏற்பட்ட காயத்தை பெற்றோரிடம் மறைத்து, தன்னை ஒரு ஜாம்பவானாக குத்துகளே வாங்காத வீராங்கனையாக காட்டிக் கொண்டார். அப்படி பெற்றோரிடம் மறைத்து அவர் உடம்பில் வடுவாக மாறியிருக்கும் காயங்கள் ஏராளம்.

வீட்டருகே இருக்கும் பயிற்சி மையத்தில் ஆரம்பக்கட்ட பயிற்சிகளை முடித்தார். நிஜமான ரிங்குக்குள் இறங்கி ரோஷமாக தனது குத்துகளை விட தொடங்கினார். 2009 தேசிய அளவிலான போட்டி ஒன்றில் வென்றுவிட்டு பதக்கத்தை தந்தையிடம் கொண்டு வந்து காண்பித்தார். அந்த பதக்கம் அவரின் மனதைக் கரைத்தது. இதன்பிறகு, பூஜாவின் தந்தை ‘கமான் வேலு’ என கில்லி பட க்ளைமாக்ஸ் ஆஷிஸ் வித்யார்த்தி போல மாறிப்போனார். பூஜா ராணியின் முதல் ரசிகர் அவர்தான்.

இத்தனை நாள் வாங்கிய குத்துகளை கூட அப்பாவிடமிருந்து மறைக்க வேண்டிய சூழலிலிருந்த பூஜா ராணி, இப்போது ஏதோ விடுதலை பெற்றவரை போல உணர்ந்தார். தந்தையின் ஆதரவு அவருக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுத்தது. அவருடைய கனவுகள் இன்னும் வேகமாக சிறகடித்து பறந்தன. 2012, 2014, 2015 மூன்று ஆண்டுகளிலும் ஆசிய மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றார்.

தனது உச்சபட்ச கனவான 2016 ரியோ ஒலிம்பிக்கில் தகுதிப்பெற முடியாமல் தடுமாறியிருந்தார் பூஜா. அந்த 2016-2018 இரண்டு ஆண்டுகளுமே பூஜாவுக்கு போதாதகாலமாக அமைந்தன. தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்தில் சிக்கினார். பயிற்சியின் போது தோள்பட்டையில் பெரிய காயம் ஏற்பட்டது. முழுதாக ஒரு வருடம் முடங்கியிருக்க வேண்டிய நிலை. ஆனால், மீண்டு வந்தார். முன்பை விட சக்திமிக்க ராணியாக!

பூஜா ராணி

பூஜா ராணி
Pooja’s Twitter handke

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *