Share on Social Media


மாறன் இயக்கிய ‘ஆன்டி இண்டியன்’ என்ற படத்தை ஆதம்பாவா தயாரித்திருக்கிறார். படத்தின் பணிகள் நிறைவுபெற்று சென்சார் வாங்குவதற்காக சென்ற இடத்தில் படத்தைப் பார்த்த சென்சார் குழு, படத்திற்கு தடை விதித்தனர். ஆகையால், படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு எடுத்துச் சென்றனர். அங்கேயும் சில முட்டுக்கட்டைகள். ஏன் இந்தப் படத்திற்கு இந்தளவுக்கு பிரச்னை, அப்படி அந்தப் படத்தில் என்ன இருக்கிறது, ரிவைசிங் கமிட்டியில் நடந்தது என்ன என்பதை அறிந்துகொள்ள படத்தின் தயாரிப்பாளரிடம் பேசினேன்.

'ஆன்டி இண்டியன்'

‘ஆன்டி இண்டியன்’

”இங்க சென்சார்ல படத்துக்குத் தடைனு சொன்னதும் பெங்களூர்ல ரிவைசிங் கமிட்டிக்கு எடுத்துட்டுப் போனோம். அங்க நாகபரணானு ஒரு பெரிய இயக்குநர் இருக்கார். அவர் தலைமையில பத்து பேர் படம் பார்த்தாங்க. பார்த்து முடிச்சவுடன், ‘ரொம்ப டேரிங்கான படமா எடுத்திருக்கீங்க. ரொம்ப நல்ல படம்’னு பாராட்டி முடிச்சுட்டு, ‘சில விஷயங்களை காம்ப்ரமைஸ் பண்ணா, இந்தப் படம் எந்த சிரமும் இல்லாமல் வெளியே வந்திடும்’னு சொன்னார். என்னமாதிரியான கரெக்‌ஷன் பண்ணணும்னு கேட்டதுக்கு, ‘முதல்ல படத்துடைய டைட்டிலை மாத்துங்க. யாரை ஆன்டி இண்டியன்னு சொல்றீங்க?’னு கேட்டார். ‘மத ஒற்றுமையை சீர்குலைக்கிற, அரசியலுக்காக மக்களை பலிகடாவாக்குறவங்களை ஆன்டி இண்டியன்னு சொல்றோம். அந்த மாதிரியான கதாபாத்திரங்களை படத்தில் பார்த்திருப்பிங்க’னு சொன்னோம். ‘சரிதான். ஆனாலும், அந்த டைட்டிலை மாத்தணும்’னு சொன்னாங்களே தவிர, தெளிவான காரணத்தை சொல்லலை. அதிலேயே வாக்குவாதமாகிடுச்சு.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *