Share on Social Media

ஆம்… நேற்று உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து, இன்று நீங்கள் அடித்தபோது குனிந்து அடிவாங்கிய ஒரு தலைமுறை, நாளை அதிலிருந்து முற்றிலும் விலகியிருக்கத் தீர்மானித்துவிட்டது உண்மையிலேயே அனைவரும் கவலைப்பட வேண்டிய செய்தி இது.

இவையனைத்திற்கும் காரணங்களைத் தேடுவதைக் காட்டிலும், இனி உங்கள் மீட்பர்களை இந்த மனநிலையிலிருந்து மீட்க, மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றை பற்றி யோசிப்போம்.

* மக்களுக்கு மருத்துவர்கள் மீது நம்பிக்கையும், மருத்துவர்களுக்கு மக்கள் மீதான பயத்தையும் போக்க ஒரே வழி தகவல் தொடர்பு(Communication). Acknowledge, Listen, Explain, Review ஆகிய மந்திரச் சொற்கள் இருபக்கத்தினருக்குமான புரிதலை, நம்பிக்கையை உண்டாக்கவேண்டும்.

* உலகில் பெரிதும் மதிக்கப்படும் மருத்துவத் தொழிலையும், அதனை ஏற்று நடத்தும் மருத்துவர்களையும், அவர்களின் தியாகத்தையும் போற்றிப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. பொத்தாம்பொதுவாக எதிர்மறையாக சினிமாக்களிலும், கதைகளிலும் சித்தரிப்பதை முதலில் நிறுத்தவேண்டும்.

* பரபரப்பான செய்திகளுக்கு மட்டுமே ஊடகங்கள் அல்ல… குற்றங்களைச் சொல்வதோடு அது மீண்டும் நடக்காமல் தடுப்பதிலும் அவர்களது பங்கு பெரிதும் உள்ளது என்பதை உணர்ந்து அவர்கள் செயல்படவேண்டும்.

* பிரச்னைகள் வரும்போது மட்டுமே விழித்தெழுந்து வெறும் கண்டனம் கருத்து தெரிவித்தல் மட்டுமில்லாமல், மற்ற சமயங்களிலும் மருத்துவ சமுதாயம் பற்றி மக்களிடையே புரிதல்களை ஏற்படுத்த விளைய வேண்டும்.

ஆக, மக்களிடமிருந்து விலகி நிற்க முடிவெடுத்துள்ள ஒரு தலைமுறையினரை மீண்டும் நம்முடன் சேர்த்தணைத்து, நமது எதிர்காலத்தை பாதுகாப்பாக்கிக் கொள்வது நம் அனைவரின் கைகளிலும்தான் உள்ளது!

மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர் தின நல்வாழ்த்துகள்!

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *