Share on Social Media

மேலோட்டமாகப் பார்ப்பதற்கு புகைப்பது நல்லதுதான் போலிருக்கிறது என்று தோன்றினாலும், இந்தப் புகையிலை புகைக்கப்படும்போது இதன் நிகோடினிலிருந்து உண்டாகும் கோ-நிகோடின், பைரிடீன், கார்பன் மோனாக்சைட் போன்ற ரசாயனப் பொருட்கள் பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

புகையிலைகளைப் பதப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் 4000த்திற்கும் மேலான ரசாயனப் பொருட்களும், நூற்றுக்கணக்கான நச்சுப்பொருட்களும் உண்மையில் மாரடைப்பு, பக்கவாதம், இரத்த அழுத்தம், நுரையீரல் நோய்கள், அல்சர், ஆகியவற்றையும் முக்கியமாக நுரையீரல், இரைப்பை, கணயம் உள்ளிட்ட அனைத்துப் புற்றுநோய்களுக்கும் காரணமாக அமைகிறது என்பது தான் வேதனை.

நான்கு வினாடிக்கு ஒரு மரணம் என்ற அளவில், வருடத்தில் கிட்டத்தட்ட 80 லட்சம் மக்களை உலகெங்கும் பலிகொள்கிறது புகையிலை. இதில் பாசிவ் ஸ்மோக்கிங் என பெண்களையும், உதிரும் சாம்பல் மற்றும் வீடுகளில் படியும் புகை மூலமாக குழந்தைகளையும் என வருடத்திற்கு, பத்து லட்சம் புகைக்காதவர்களையும் கொன்று தீர்க்கிறது. இதில் கொரோனாவும் சேர்ந்து புகைப்பவர்களை அதிகம் கொன்று குவிக்க, புகைப்பழக்கத்தை கைவிடும் வழிமுறைகள் மிகவும் அவசியமான ஒன்றாக இப்போது கருதப்படுகிறது.

ஒரு தேதியைக் குறித்துக் கொண்டு, cold turkey எனும் ஒரேநாளில் புகைப்பழக்கத்தை நிறுத்துவது, அல்லது tap tapering என படிப்படியாகக் குறைத்து, பிறகு நிறுத்துவது என இரண்டு வழிமுறைகளுமே ஏற்புடையது.

புகையிலைக்கான மாற்றாக உலர் திராட்சை, கிராம்பு, ஏலக்காய் அல்லது Nicotine Replacement Therapy எனும் குறைந்த அளவு நிகோடின் கொண்ட சூயிங்கம் அல்லது மிட்டாய்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்துவதுடன், மெடிட்டேஷன், மியூசிக், மூச்சுப்பயிற்சி, நடைபயிற்சி ஆகியவற்றையும் மேற்கொள்வது மனதை ஒருநிலைப்படுத்த இதில் உதவுகிறது.

அனைத்திற்கும் மேலாக, ‘Reward Yourself’. அதாவது புகைப்பழக்கத்தை நிறுத்திய ஒரு வாரம், ஒரு மாதம் என குடும்பத்துடன், நண்பர்களுடன் கொண்டாடுவது இன்னும் அதிகம் பயனளிக்கிறது என்று கூறும் உலக சுகாதார அமைப்பு இவ்வாறு புகைப்பழக்கத்தை நிறுத்த முனைப்புடன் செயல்பட்ட நாடுகளை, இந்த உலக புகையிலை எதிர்ப்பு நாளன்று கௌரவப்படுத்த உள்ளது.

இந்த வழிமுறைகளை நாமும் கடைபிடித்து, நமது நண்பர்களை புகைப்பழக்கத்திலிருந்து மீட்கலாமே என்று தோன்றுகிறதல்லவா?

ஆம்… Quitters are Winners!

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *