Share on Social Media

“இதெல்லாம் நம்முள் அன்றாடம் நடக்கும் விஷயங்கள் தானே? இதற்கு எதற்கு வேறு புதிய பெயர்கள்?” என்று கேள்வி கேட்பவர்களுக்கான கேள்வி இது. “இன்றைய அறிவியல் உலகிலும் இறைவனை நம்புபவர்கள் இருக்கிறார்களே, எந்தவித அறிவியல் ஆதாரம் இல்லாதபோதும் எப்படி கடவுள், மனம், மனசாட்சி, உயிர் ஆகியவற்றை மனதிற்குள் உருவகப்படுத்தி மனிதர்கள் வாழ்கின்றனர்?” – இதே கேள்வியை நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுப்பிய உளவியலின் தந்தை என போற்றப்படும் டாக்டர் சிக்மண்ட் ஃபிராய்ட், தனது ஆய்வுகள் மற்றும் புரிதல்கள் மூலமாக மனித மனங்களை மனங்களை வகைப்படுத்தியிருக்கிறார். ஐடி, ஈகோ, சூப்பர் ஈகோ என்று மூன்று வகையாகப் பிரித்திருப்பவர், அவற்றின் முக்கியத்துவத்தையும், அவற்றின் தேவைகளையும், ‘The Ego and The ID’ என்ற தனது புத்தகத்தில், Tripartite Theory-யில் விளக்கமாக எழுதியுள்ளார்.

இப்போது சிக்மண்ட் ஃபிராய்ட் வழியாக, இந்த மன இயல்புகளை சற்று ஆழமாகப் பார்ப்போமா?

ID எனும் Instincts and Drives!

ஒரு குழந்தை பசித்ததும் அழுவது போல, ஒரு காட்டுவாசி விரும்பியதும் புணர்வது போல (வேட்டையாடுவது) எந்தவொரு மேல்பூச்சும் இல்லாத மனதின் நேரடி ஆசைகளும், யாரைப் பற்றியும் கவலைப்படாத செயல்பாடுகளும் என்று சொல்லலாம். பசி, தாகம், உறக்கம், மோகம் போன்ற உணர்வுகளை (basic biological reflexes), எந்தவொரு மாற்றமும் இல்லாமல், அப்படியே வெளிப்படுத்தும் நிலை தான் இந்த ID.

Ego எனும் தன்முனைப்பு!

அந்தக் குழந்தை வளர்ந்துவிடுகிறது. அந்த காட்டுவாசி இப்போது நாகரிகம் அடைந்திருக்கிறான். ‘’யாரோ வந்திருக்கிறார்கள்… பசிக்கிறது என்று அம்மாவிடம் பிறகு சொல்லலாம்!’’ என்று குழந்தை யோசிக்கிறது. இத்தனை பேர் ”இருக்கிறார்களே… என்ன நினைப்பார்கள்?” என்று காட்டுவாசி நினைக்கிறான். இப்படி ஒரு குழந்தையோ, ஒரு மனிதனோ பிறரையும் கருத்தில் கொண்டு தனது உணர்வுகளை, விருப்புவெறுப்புகளை முறைப்படுத்துவது ஈகோ. ஒரு காட்டுவாசி மனிதனை கடமை, ஒழுக்கம், பொறுமை, வெற்றி என்று நெறிப்படுத்துவதுதான் இந்த ஈகோ எனும் தன்முனைப்பு.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *