Share on Social Media

முதல் வேலை மண்பாண்டங்கள் செய்யும் குயவர் வேலை. ஒரு தொழில்திறன் நிறைந்த குயவர் எப்படி மண்ணைப் பிசைந்து, பக்குவப்படுத்தி, கண்ணுக்கு அழகிய மண்பாண்டங்களை உருவாக்குகிறாரோ அதுபோல பச்சை மண்ணாய்க் கிடைத்திருக்கும் குழந்தையை பண்பட்ட குடிமகனாய்க் கொடுக்க, ஒரு குயவர் போல் பொறுமையுடன் வேலை செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

இரண்டாவது தோட்டக்காரர் வேலை. மண்ணை சீர்படுத்தி விதை விதைத்து, தண்ணீர் ஊற்றி, பராமரித்து, களை எடுத்து, மரமாகி, காய்த்து கனி கிடைப்பதுபோல் குழந்தை நல்ல முறையில் வளர, உடலுக்கும் உள்ளத்திற்கும் வளம் தரக் கூடியவைகளை வழங்கி, அவர்கள் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள தீய விஷயங்களை களையெடுக்கும் ஒரு தோட்டக்காரராக பெற்றோர் செயல்பட வேண்டும்.

அடுத்தது வழிகாட்டி வேலை. குழந்தைக்கு நல்ல வழிகாட்டியாக இருந்து நல்லது கெட்டது எது என்பதை எடுத்துச் சொல்லி, வளைந்து கொடுத்தல், விட்டுக்கொடுத்தல், சகித்து வாழ்தலைக் கற்றுத் தருவதோடு, நமது விருப்பு வெறுப்புகளை திணிக்காது குழந்தைகளை வளர்க்க நல்ல வழிகாட்டியாக வாழத் தெரிந்திருக்க வேண்டும்.

நான்காவது, ஆலோசகர் வேலை. நெருக்கடியான நேரங்களில் எப்படி செயல்படவேண்டும், உணர்ச்சிகளை எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும், முக்கியமாக வெற்றி தோல்வியை எப்படி கையாள வேண்டும் என்ற வாழ்க்கைப் பாடங்களை சொல்லிக் கொடுக்கும் ஆலோசகர் வேலை என்று குழந்தை வளர்ப்பை கலைநயத்துடன் விளக்குகின்றனர்.

ஆம்… உலகிலேயே சிறந்த ஒரேயொரு குழந்தை நம்மிடம் தான் இருக்கிறது. அதை நாமே அருகிலிருந்து, மிதித்து மண்ணாக்கி விடக்கூடாது!

“உங்கள் குழந்தைகள் என்பவர்கள் உங்கள் மூலமாக இவ்வுலகுக்கு வந்தவர்களே அன்றி, உங்களுக்காக இவ்வுலகுக்கு வந்தவர்கள் அல்ல. உங்களுடன் அவர்கள் இருந்தாலும் அவர்கள் உங்களுடையவர்கள் அல்ல. உங்கள் அன்பை அவர்களுக்குக் கொடுங்கள். உங்கள் எண்ணங்களை, விருப்பங்களை அல்ல…” என்ற கலீல் ஜிப்ரானின் வரிகள், ஹெலிகாப்டர் பேரன்ட்டிங் பெற்றோர்களுக்கு மட்டுமன்றி நம் அனைவருக்குமானவைதான்!
#ParentingArt

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *