Share on Social Media


புதுச்சேரியில் தீவிரமெடுத்துவரும் கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களுக்கு நிகராக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகிவருகிறார்கள்.

இந்நிலையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையின் கொரோனா பிரிவில், செவிலியர் அலுவலராக பணியாற்றி வந்த நிரஞ்சனா என்பவர் கொரோனா தொற்று காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மரணத்தால் அதிர்ச்சியில் இருக்கும் சக செவிலிய அலுவலர்கள், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லததாலேயே தொற்று ஏற்பட்டு நிரஞ்சனா உயிரிழந்தார் என்று குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று சமூக வலைத்தளங்களில் செவிலிய அதிகாரி ஒருவர் வெளியிட்ட ஆடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ஆடியோவில்,“எங்களுக்கு எந்த நஷ்ட ஈடும் தேவையில்லை. தரமான பி.பி.இ கிட் வாங்கிக் கொடுத்தால்போதும். தரமான பி.பி.இ கிட் வேண்டுமென்று கவர்னருக்கும், சுகாதாரத்துறை செயலருக்கும் கடிதம் போட்டுவிட்டேன். இப்போது கொடுக்கப்படும் தரமில்லாத பி.பி.இ கிட்டை ஒரு மணி நேரம் கூட அணிய முடியவில்லை. மூச்சுத் திணறல் ஏற்படுவதால் அதனை கழற்றிவிடுகின்றனர் செவிலியர்கள்.

நாங்கள் எவ்வளவுதான் மன்றாடுவது? மருத்துவமனையில் வேலை செய்வதால் மருத்துவமனை குறித்து எதையும் வெளியில் சொல்லக் கூடாது என்று அமைதியாக இருக்கிறோம். சாதாரண நாள்களாக இருந்தால் வீதியில் இறங்கி போராடுவோம். ஆனால் பெருந்தொற்று காலமான தற்போது நாங்கள் அப்படி செய்தால், `மக்களைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. இவர்களது தேவைக்காக புலம்புகிறார்கள்’ என்று செய்திகள் போடுவார்கள் என்பதால், தரமான பி.பி.இ கிட் வாங்கி கொடுங்கள் என்று மன்றாடி கேட்டுப் பார்க்கிறோம். ஆளுநருக்கும், சுகாதாரத்துறை இயக்குநருக்கும் கடிதம் கொடுத்து ஒரு மாதத்திற்க்கும் மேல் ஆகிறது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *