Share on Social Media


சட்டசபைத் தேர்தல் நெருங்குவதையொட்டி பா.ஜ.க சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் முக்கிய நிர்வாகிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  அமைப்பு ரீதியிலான பணிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் கூறுகையில், “வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ளும் மிக பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற உள்ளது. 28-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா விழுப்புரத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். அதேபோல் மார்ச் மாதம் 8 மற்றும் 9-ம் தேதிகளில் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நாகர்கோவிலில் நடந்த பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம்

நாகர்கோவிலில் நடந்த பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம்

புதுச்சேரியில் நாராயணசாமி, ஆட்சியை சீராகக் கொண்டு செல்லவில்லை என்பதே உண்மை. அதனால்தான் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் ராஜினாமா செய்தனர். நாராயணசாமிக்கு ஆட்சி நடத்தத் தெரியவில்லை. அவரது கட்சி எம்.எல்.ஏ-க்களால்தான் ஆட்சி கவிழ்ந்தது. நாராயணசாமியின் இயலாமையை இது காட்டுகிறது. புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்ததற்கும் பா.ஜ.க-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *