Share on Social Media


சென்னை : ”புதுச்சேரிக்கான கூட்டணி குறித்து, தலைவர்கள் என்ன முடிவை சொல்கிறார்களோ; அதை நாங்கள் கேட்போம்,” என, முதல்வர் நாராயணசாமி கூறினார்.
சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, துறை கோப்புகள் குறித்து விவாதிக்க, அமைச்சருக்கு கூட நேரம் ஒதுக்குவதில்லை. அவரது அராஜக போக்கை பற்றி புகார் செய்ய, ஜனாதிபதி, உள்துறை அமைச்சரிடம் நேரம் கேட்டு உள்ளோம்.புதுச்சேரியில், மக்கள் நல திட்டங்களை செய்யவிடாமல், கவர்னர் தடுப்பதை கண்டித்து, பல போராட்டங்களை நடத்தி வருகிறோம்.புதுச்சேரியில், காங்., – தி.மு.க., கூட்டணி உள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து, காங்., தலைவர்கள் சோனியா, ராகுல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பேசி முடிவு செய்வர். கூட்டணி குறித்து, தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ; அதை நாங்கள் கேட்போம்.
இவ்வாறு, நாராயணசாமி கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *