Share on Social Media


புதுச்சேரி ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி, மத்திய உள்துறை மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கும் புகார் கடிதத்தில், “புதுச்சேரியில் மறைந்த ப.சண்முகம், எம்.ஓ.ஹெச்.பாரூக் போன்றவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாடாளுமன்ற மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்தவர்கள்.

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

ஆனால் அவர்கள் புதுச்சேரி அரசின் நிதியை லட்சக்கணக்கில் செலவு செய்து தங்களுக்கென தனியாக அலுவலகம் அமைத்துக் கொள்ளவில்லை. ஏற்கெனவே இருந்த அரசுக் கட்டடங்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஆனால் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மத்திய இணை அமைச்சராக இருந்த காலகட்டம் முழுவதும் (08.11.2009 – 31.03.2014) நகராட்சிக்கு சொந்தமான கம்பன் கலையரங்கத்தின் மாடியை ரூ.58.84/- லட்சம் செலவு செய்து தனது அலுவலகமாக பயன்படுத்திக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் அந்த அலுவலக செயல்பாட்டுக்காக 2,66,037/- லட்சம் ரூபாயை புதுச்சேரி நகராட்சி கட்டியிருக்கிறது.

vikatan 2019 05 7de66c8e d0c2 422f b4ab e95712c51c27 kannan puducherry1 Tamil News Spot
புதுச்சேரி முன்னாள் ராஜ்யசபா எம்.பி ப.கண்ணன்

அதேபோல 19.10.2009 முதல் 31.05.2013 வரை ராஜ்யசபா எம்.பியாக பதவி வகித்த ப.கண்ணன், 1,000 சதுர அடியைக் கொண்ட பிப்டிக் மாடியை ரூ.7,49,700/- லட்சம் செலவு செய்து அலுவலகமாக பயன்படுத்திக் கொண்டார். இவர்களுக்குப் பிறகு நாடாளுமன்ற மற்றும் மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட யாரும் அரசின் செலவில் தனியாக அலுவலகம் அமைத்துக் கொள்ளவில்லை.

ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வைத்திலிங்கம், சட்டப்பேரவையை ஒட்டியிருக்கும் இடத்தில் ரூ.17,92,428/- லட்சம் ரூபாய் செலவில் புணரமைத்து தனது அலுவலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். புதுச்சேரி கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சூழலில், ஏற்கெனவே சீரமைக்கப்பட்டிருக்கும் ஏதேனும் ஒரு அரசு கட்டடத்தை அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசு நிதியை பல லட்சங்கள் விரயம் செய்து அலுவலகத்தை அமைத்திருக்கிறார். அவரின் பதவிக் காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் கூட இல்லாத நிலையில் மக்களின் வரிப்பணத்தை இத்தனை லட்சங்கள் செலவு செய்து தனியே அலுவலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன ?

Also Read: புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்பு முதல் ரங்கசாமி பதவியேற்பு வரை! – பா.ஜ.க-வின் ரோல் என்ன?

புதுச்சேரியின் எம்.பியாக தேர்வு செய்யப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கென்று தனியாக ஒரு கட்டடம் கட்டியிருந்தாலும் கூடம் இத்தனை லட்சங்கள் செலவாகியிருக்காது. அதனால் இனிவரும் காலங்களில் புதுச்சேரியின் நாடாளுமன்ற மற்றும் மக்களவை எம்.பிக்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மக்களின் வரிப்பணத்தை வீணடித்து தனியாக அலுவலகங்களை அமைப்பதை தடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *