Share on Social Media


புதுச்சேரி : -புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிய உள்ள நிலையில், வரும் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

தேசிய அளவில் தொற்று பரவல் மற்றும் இறப்பு விகிததில் 2வது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 10 ம் தேதி முதல் இன்று 24ம் தேதி வரை, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. காய்கறி, இறைச்சி, மளிகை, மருந்தகம், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகள் காலை 5:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று 24ம் தேதி முடிய உள்ள நிலையில், ஊரடங்கை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அவரது செய்திக் குறிப்பு: ; புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய பொது அடைப்பு இன்று 24ம் தேதி வரை அமலில் உள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மதியம் 12:00 மணி வரை காய்கறி, பழங்கள் உள்ளிட்ட சத்தான உணவு பொருட்கள் வாங்கிச் செல்ல கடைகள் திறக்கப் பட்டுள்ளன. மக்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றி வாங்கிச் செல்ல வேண்டும். பால், மருந்து போன்றவை ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி எந்த தடையும் இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்கி கொள்ள வேண்டும். கொரோனா தாக்கம் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. இது பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் நடைபெற முடியாது. எனவே, ஏற்கனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை தொடரும். நிலைமையை பொருத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும். இது தொடர்பாக விரிவான அரசாணை வெளியிடப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிப்பு தாமதம்கடைகளில் மக்கள் கூட்டம்புதுச்சேரி அரசு ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை ஒரு நாள் முன் கூட்டியே வெளியிட்டிருந்தால் நேற்று சமூக இடைவெளியின்றி மக்கள் கடை வீதிகளில் கூடியதை தவிர்த்திருக்கலாம்.

புதுச்சேரியில் கொரோனா தொற்று முதல் அலையின் போது தமிழகத்தை பின்பற்றியே பெரும்பாலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு 22ம் தேதி மதியமே 24ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவித்தது. இதே போல் புதுச்சேரியிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தக்கூடும் என்று எண்ணிய மக்கள் கடை வீதிகளில் சமூக இடைவெளியின்றி பொருட்களை வாங்க குவிந்தனர். புதுச்சேரியில் பகல் 12:00 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், வழக்கமாக இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக நின்று வாங்கிச் சென்றனர்.

புதுச்சேரி பெரிய மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வில்லியனுார் கிழக்கு மாட வீதி, சுல்தான்பேட்டை இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.தமிழகத்தில் அறிவிப்பு வெளியிட்ட அன்றே, புதுச்சேரியில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கும் என்று தெரிவித்திருக்கலாம். ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை ஒரு நாள் முன் கூட்டியே வெளியிட்டிருந்தால் நேற்று சமூக இடைவெளியின்றி மக்கள் கடை வீதிகளில் கூடியதை தவிர்த்திருக்கலாம்.ஊரடங்கு அறிவிப்பு தாமதம்கடைகளில் மக்கள் கூட்டம்புதுச்சேரி அரசு ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை ஒரு நாள் முன் கூட்டியே வெளியிட்டிருந்தால் நேற்று சமூக இடைவெளியின்றி மக்கள் கடை வீதிகளில் கூடியதை தவிர்த்திருக்கலாம்.

புதுச்சேரியில் கொரோனா தொற்று முதல் அலையின் போது தமிழகத்தை பின்பற்றியே பெரும்பாலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு 22ம் தேதி மதியமே 24ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவித்தது. இதே போல் புதுச்சேரியிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தக்கூடும் என்று எண்ணிய மக்கள் கடை வீதிகளில் சமூக இடைவெளியின்றி பொருட்களை வாங்க குவிந்தனர்.புதுச்சேரியில் பகல் 12:00 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், வழக்கமாக இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக நின்று வாங்கிச் சென்றனர்.

புதுச்சேரி பெரிய மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வில்லியனுார் கிழக்கு மாட வீதி, சுல்தான்பேட்டை இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.தமிழகத்தில் அறிவிப்பு வெளியிட்ட அன்றே, புதுச்சேரியில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கும் என்று தெரிவித்திருக்கலாம். ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை ஒரு நாள் முன் கூட்டியே வெளியிட்டிருந்தால் நேற்று சமூக இடைவெளியின்றி மக்கள் கடை வீதிகளில் கூடியதை தவிர்த்திருக்கலாம்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *