Share on Social Media


இதுபற்றி தொல்லியல் ஆய்வுக்குழுவினர் கூறும்போது, “மேலாய்வில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு வகையிலான மணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை நுட்பமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. பச்சை, கறுப்பு, சிவப்பு, ஊதா, பழுப்பு, கருமை, இள மஞ்சள் வண்ணம் கொண்டவையாகவும் உள்ளன. கறுப்பு மற்றும் ஊதா நிறமுடைய வளையலின் உடைந்த பகுதிகள் கிடைத்துள்ளன. இவை கண்ணாடி வகையைச் சேர்ந்ததாக உள்ளன. ஓர் உலோக வளையலின் துண்டுப் பகுதியும் கிடைத்துள்ளது. இது கடினமானதாகவும் இருக்கிறது. அதோடு, உருக்கு மூலம் உருவாக்கப்பட்ட சிறு கருவியும், இரும்புத்துண்டு ஒன்றும் கிடைத்திருக்கின்றன. இவற்றின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்வதன் மூலம் தெரியவரும். நிறமற்ற கண்ணாடிப் படிகம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மேலாய்வில் கிடைத்த தொல் பொருள்கள்

புதுக்கோட்டை மேலாய்வில் கிடைத்த தொல் பொருள்கள்

இதன் முனைகள் மிக நுட்பமாக தீட்டப்பட்டுள்ளன. ஆனாலும் இது ஆபரணங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அனுமானிக்க முடியாது. முழுமையற்ற நிலையில் இரண்டு வகையான பானை குறையீடுகள் காணப்பட்டுள்ளன. கருமை நிற பானை ஓடுகள், கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள் மிகுதியாக காணப்படுகின்றன. இத்துடன் மிகப்பெரிய கொள்கலங்களின் அடி பகுதிகள், உருக்கு உலைகளின் அடிமானங்கள், உலோகக் கழிவுகள் உள்ளிட்டவை மிகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. மேற்பரப்பு ஆய்வில் கிடைந்த இந்தப் பொருட்கள் பொற்பனைக் கோட்டையின் செழுமையையும் உலோகவியலில் மக்கள் பெற்றிருந்த அறிவையும் காட்டுவதாகவும் இருக்கிறது. மேற்பரப்பு ஆய்விலேயே இத்தனை பொருள்கள் கிடைத்திருக்கின்றன. முழுமையான ஆய்வில் இன்னும் ஏராளமான தொல்லியல் பொருள்கள் கிடைக்கும்” என்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *