Share on Social Media


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். கடந்த 30.12.2019 அன்று, இவர் தனது வீட்டிற்குப் பக்கத்துத் தெருவில் வசிக்கும் 4 வயது சிறுமி, விளையாடிக்கொண்டிருந்த போது பாலியல் வன்முறை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் பாலமுருகனைக் கைது செய்தனர்.

இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் அங்கவி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையில், பாலமுருகனுக்கு 10ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.25ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முனைவர் சத்யா அதிரடி தீர்ப்பு அளித்தார். அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கெனவே அரசு சார்பில் ரூ.2.5லட்சம் நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, மேலும் கூடுதலாக ரூ.2.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *