Share on Social Media


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பாப்பாவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். வெண்ணிலா தனது இரண்டு மகள்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் திடீரெனதான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடம்பில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அப்போது, அவரை அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் தடுத்தி நிறுத்தினர். வெண்ணிலா கொண்டு வந்த மனுவில், “என்னுடைய கணவர் பாலகிருஷ்ணன் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் உள்ளார். எங்களுடைய தேவைகளை நிறைவேற்றாததுடன், என்னையும், என் குழந்தைகளையும் பார்க்கக்கூட வருவதில்லை. இதுபற்றி கேட்டதற்கு என்னையும் என் குழந்தைகளையும் அடித்து விரட்டிவிட்டார்.

இதையடுத்து, வேறுவழியின்றி அறந்தாங்கியில் உள்ள அண்ணன் வீட்டில் தங்கியிருந்தோம். அங்கும் எங்களை இருக்கவிடாமல் வந்து அடித்து உதைத்துத் துன்புறுத்தினார். இதுபற்றி அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். இந்த நிலையில், என்னை நல்லபடியாகப் பார்த்துக் கொள்வதாகக் கூறியும், சமாதானமாகச் செல்வதாகவும் போலீஸாரிடம் கூறி என்னை மறுபடியும் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஆனாலும், அந்த உறவை அவர் கைவிடவில்லை. அதே நேரத்தில் என்னையும் குழந்தைகளையும் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். அதனால் எங்களுக்குச் சாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோகர்ணம் காவல்துறை அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, மேல்விசாரணைக்காக திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் தனது மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *