Share on Social Media


கீரனூரைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்களான முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல்பிரசாத் கூறும்போது, “ஆலங்குடிபட்டி கானாகுளத்தின் தெற்குப் பகுதியில் சிதிலமடைந்த நிலையில், செம்புற கற்களைக் கொண்டு வட்டவடிவில் அடுக்கப்பட்ட பழங்கால ஈம சின்னங்கள் தொடர்ச்சியாக அமைந்துள்ளன. அதோடு, இறந்தோரின் நினைவாக நடப்படும் நெடுங்கற்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இந்தக் கல்வட்டங்களின் தொகுப்பினைச் சுற்றிலும் பெரிய ஈமத் தாழிகளின் கனமிக்க அடிப்பாகங்கள், கறுப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், மெல்லிய கறுப்பு நிற பானை ஓடுகள் எனப் பலவகையான பானை ஓடுகள் மேற்பரப்பிலும், மண்ணிற்குள் புதைந்த நிலையிலும் காணப்படுகின்றன.

மீன் செதில் பானை ஓடுகள் கண்டெடுப்பு

மீன் செதில் பானை ஓடுகள் கண்டெடுப்பு

பழங்காலத்தில் ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அவர் பயன்படுத்திய பொருள்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து அதனைச் சுற்றி இதுபோன்ற நடுகற்களை எழுப்புவது வழக்கமாக இருந்துள்ளது. கீரனூர் வட்டாரத்தைச் சுற்றி அமைந்துள்ள தாயினிபட்டி, துடையூர், செங்களூர் கிராமங்களில் அமைந்துள்ள நீத்தார் நினைவுச் சின்னங்களைப் போலவே இந்த கல்வட்டங்களும் அமைந்துள்ளதால் இவை 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை மிக்க, இரும்புக் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும் சிதறிக் கிடக்கும் பானை ஓடுகளின் மேற்பரப்பில் மிக நேர்த்தியான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்புறத்தில் மீன் செதில் போன்று வடிவமைக்கப்பட்ட பானை ஓடுகள் இங்கு அதிகளவில் கிடைத்திருக்கின்றன. எனவே, இங்கு அகழாய்வு செய்யப்படும் பட்சத்தில் ஏராளமான சின்னங்கள் நமக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அகழாய்வு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *