Share on Social Media


2030-ம் ஆண்டில் சென்னையின் குடிநீர்த் தேவை 20 டி.எம்.சியாக இருக்கும். இப்போது இருக்கும் நான்கு நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 11.257 டி.எம்.சி மட்டுமே. எனவே மீதி 8.75 டி.எம்.சி கொள்ளளவுடைய புதிய நீர்த்தேக்கங்கள் விரைந்து உருவாக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கொள்கை முடிவு தீர்மானம் மிகச் சரியானதன்று, தேவையற்றது.

தற்போது சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் கிடைக்கும் அளவு ஆண்டுக்கு 2.10 டி.எம்.சி (மீஞ்சூர் மற்றும் நெம்மேலி). சென்னைப் புறநகரில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து பெறும் நீரின் அளவு 0.50 டி.எம்.சி. வீராணம் ஏரி – நெய்வேலியில் இருந்து பெறும் நீரின் அளவு 1 டி.எம்.சி. மேலும், இன்னொரு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் 200 எம்.எல்.டி (2.10 டிஎம்சி) கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதுபோக சென்னைக் குடிநீருக்கு ஓராண்டுக்குத் தேவைப்படுவது 9.96 டி.எம்.சி மட்டுமே. இதை இன்றுள்ள நான்கு நீர்த்தேக்கங்களிலேயே (11.257 டிஎம்.சி) தேக்கி வைக்க முடியும். இந்தக் கூடுதல் நீரை பூண்டி, சோழவரம், செங்குன்றம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் வருடத்துக்கு இருமுறை நிரப்புதல் என்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்தால்… ஆண்டுக்குக் கூடுதலாக 11.257 டி.எம்.சி நீரைத் தேக்கி வைத்து பயன்படுத்த முடியும். எனவே, 2030-ம் ஆண்டுகளில் சென்னை மாநகரகத்துக்குத் தேவைப்படும் (மதிப்பிடும் அளவு) 20 டி.எம்.சி தண்ணீரை மேலே குறிப்பிட்ட நான்கு ஏரிகளிலேயே சேமிக்க முடியும். கூடுதலாகப் புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படாது. மக்கள் வரி பணத்தை வீணடிக்கவும் தேவையில்லை” என்றார்.

முனைவர் வீரப்பன்

முனைவர் வீரப்பன்

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் அமைந்திருக்கும் இடம் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலம். இந்தத் திட்டத்தால் 1,400 ஏக்கர் நிலங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரவில்லை. வளர்ச்சி திட்டங்களையோ, மக்கள் சார்ந்த திட்டங்களையோ தீட்டுவதற்கு முன்பு நன்கு யோசித்து செயல்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை அல்லவா?” என்கிறார் வீரப்பன்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *