புதிய சீரியலில் என்ட்ரி தரும் கோகிலா கோபால்
17 டிச, 2021 – 13:03 IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் நாயகி நக்ஷத்திராவின் தங்கையாக கோகிலா கோபால் நடித்து வருகிறார். டிக் டாக் பிரபலமான கோகிலாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற அசை இருந்தது. இதனையடுத்து விடாமுயற்சியுடன் செயல்பட்ட அவருக்கு சீன் நம்பர் 62 என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து பெரிதாக வாய்ப்பு கிடைக்காத நேரத்தில் தான், அவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு அமைந்தது. தற்போது தமிழும் சரஸ்வதியும் தொடரில் காவ்யா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு மற்றொமொரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அன்பே வா தொடரில் கோகிலா கோபால், புதிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கிறார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவரது திரைப்பயணம் வெற்றி பெற பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !

- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

- பிழை
- இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா

- தமிழரசன்
- நடிகர் : விஜய் ஆண்டனி
- நடிகை : ரம்யா நம்பீசன்
- இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
Tweets @dinamalarcinema