Share on Social Media


முக்கிய காட்சி ஒன்றை படமாக்க மீண்டும் ஜார்ஜியா செல்கிறது ‘பீஸ்ட்’ படக்குழு.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவன், யோகி பாபு, பூஹா ஹெக்டே, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத், எடிட்டராக நிர்மல், கலை இயக்குநராக கிரண் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு சென்னை திரும்பிய படக்குழு அங்கு படத்தின் பிரதான காட்சிகளுக்காகப் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியது.

இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய காட்சிக்காக மீண்டும் ஜார்ஜியா செல்லவிருக்கிறது ‘பீஸ்ட்’ படக்குழு. படக்குழுவினருடன் விஜய்யும் இந்த மாதம் ஜார்ஜியா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்பி படத்தின் எஞ்சியிருக்கும் காட்சிகளை படக்குழு முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதல் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *