Share on Social Media


புதுடில்லி:“பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்காக ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தக்கோரும் எதிர்க்கட்சித் தலைவர்கள், அந்த சமூகத்தினருக்காக எதையும் செய்ததில்லை,” என, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி விமர்சித்துள்ளார்.

சமீப காலமாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்காக ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தக் கோரி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்காக ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த முடியாது’ என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறியதாவது:ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தும் விவகாரத்தில் ஆளும் பா.ஜ., அரசு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. ‘அனைவருக்கும் வளர்ச்சி’ என்ற கொள்கையை இந்த அரசு கடைப்பிடித்து வருகிறது.

ஜாதி, சமூகத்தை பார்க்காமல் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் நலத் திட்டங்கள் சென்றடைவதை, இந்த அரசு உறுதிபடுத்தி வருகிறது. அனைவரையும் மதிக்கும் அரசு இது; அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் கட்சியின் செயல்பாடுகளில், அது நன்றாக தெரியும்.

ஜாதி வாரியான கணக்கெடுப்பை கோரும் சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், அவர்கள் அந்த சமூகத்தினருக்காக எதையும் செய்யவில்லை. தங்கள் குடும்பத்திற்கு ஆதாயம் தேடுவதில் தான் கவனம் செலுத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.:

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *