Share on Social Media


புதுச்சேரி : ‘நாம் எந்த செயல் செய்தாலும், இறைவனின் திருநாமங்களையும் சொல்லியவாறு செய்ய வேண்டும்’ என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்தார்.புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பாவை சிறப்பு சொற்பொழிவு கடந்த 16ம் தேதி துவங்கியது.

நேற்று மூன்றாம் நாள் நிகழ்வில், ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்ததாவது:திருப்பாவையில் நாராயணனே பரம்பொருள் என்றும் அவனால் தான் நாம் வேண்டுவன அனைத்தையும் அளிக்க முடியும் என்று முதல் பாசுரத்தில் குறிப்பிட்டார் ஆண்டாள்.அவர் பாற்கடலில் உறைகின்றார் என்று நமக்கு அந்த பரம்பொருளை இரண்டாவது பாடலில் அடையாளம் காட்டினார்.அவர் தனது யோக நித்திரையில் இருந்து எழுந்து எவ்வாறு உயிர்களுக்கு உதவி செய்கிறார் என்பதை மூன்றாவது பாசுரத்தில் ஆண்டாள் குறிப்பிடுகிறார். அவர் திரிவிக்ரமனாக உருவெடுத்து, மூன்று உலகங்களையும் மகாபலியின் பிடியில் இருந்து விடுவித்தார் என்பது இந்த பாடலில் அழகாக கூறப்படுகின்றது.பொதுவாக தானும் அழிந்து பிறரையும் சேர்த்து கெடுப்பவன் அதம அதமன். பிறரை அழித்து தான் வாழ்பவன் அதமன். பிறரும் வாழ தானும் வாழ்பவன் மத்யமன். தான் அழிந்தாலும், அவமானப்பட்டாலும் பிறரை வாழ்விப்பவன் தான் உத்தமன்.வாமனனாக வந்து மூன் றடி மண் கேட்ட திருமால் நெடியனாக வளர்ந்து உலகினை அளந்தது தேவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத் தினால் தானே தவிர தனது நலத்திற்காக எதும் செய்யவில்லை என்பதால் உத்தமன் என்று ஆண்டாள் உணர்ந்து கூறுகிறார்.பகவான் தான் குறு வடிவம் தாங்கி, மாபலியிடம் இரந்து, மூவடி மண் பெற்று, திரிவிக்ரமனாய் வளர்ந்து, மகாபலியின் அகந்தையை அழித்து ஆட் கொண்டதால் வாமனன் உத்தமன் ஆனான்.மூன்றாவது பாசுரமாக வாமனாவரத்தை அமைத்தது மட்டுமின்றி, திருப்பாவையின் ஒவ்வொரு பத்து பாசுரங்களிலும் ஒரு பாசுரத்தில் என்று மூன்று இடங்களில் திரிவிக்ரம அவதாரத்தை கூறுகிறார். நாம் எந்த செயல் செய்தாலும், இறைவனின் திருநாமங்களையும் சொல்லியவாறு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.