Share on Social Media


காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா

“காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரைப் பிரியங்கா அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பது, அதற்கான செயல்திட்டங்களை வகுப்பது, மாநில மக்களின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பது, அமைப்பு ரீதியாகக் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல, லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட பிரச்னையைக் கையிலெடுத்துப் போராடி வருகிறார். அவருக்கு ராகுல் காந்தி உறுதுணையாக இருக்கிறார். இந்தப் படுகொலை ஜாலியன் வாலாபாக் சம்பவத்தைவிட மிகக் கொடூரமானது. இதோடு தொடர்புடைய மத்திய அமைச்சரின் மகன் இதுவரை கைது செய்யப்படவில்லை. இவர்களைப் பாதுகாக்கப் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கடுமையாக முயன்று வருகிறார்கள்.

விவசாயிகள் பற்றியோ மக்கள் பற்றியோ கவலைப்படாமல் தன் கட்சிக்காரர்கள் நலனுக்காகச் செயல்படும் இவர்களின் செயல்களால் விவசாயிகளின் போராட்டம் தற்போது மாநிலங்கள் கடந்து நாடு முழுவதும் பரவியிருக்கிறது. விவசாயச் சங்கத் தலைவரை கைக்குள் போட்டுக் கொண்டு விவசாயிகளின் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க அரசு. ராகுல் காந்தி இந்தப் போராட்டங்கள் வெற்றிபெற வேண்டும் எனக் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். அதற்கு உறுதுணையாகப் பிரியங்கா காந்தி மிகச்சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.

தேசிய அரசியலில் பா.ஜ.க-வை வீழ்த்தும் சக்தியாக எப்போதும் ராகுல் காந்திதான் இருப்பார். விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளார் என்ற செய்தி வரும். ராகுலுக்கு உதவியாகப் பிரியங்கா காந்தி இருப்பாரே தவிர இப்போதைக்குத் தேசிய அரசியலுக்குப் பிரியங்கா காந்தி வருவதற்கான சூழல் இல்லை” என்கிறார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *