Share on Social Media


இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா,“லண்டனில் இருந்து கடந்த வாரம் நீலகிரிக்கு வந்த 14 பேரைத் தனிமைப்படுத்தி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்துள்ளோம். இவர்களின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட ஒருவரின் தயாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மூவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மூவரின் சளி மாதிரி எடுக்கப்பட்டு புனோவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

மேலும், 14 பேரின் உறவினர்கள் 35 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. ஆப்பிரிக்கா மற்றும் வேறு நாடுகளில் இருந்து ஊட்டிக்கு வந்துள்ள 109 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுடைய உறவினர்கள் 84 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை” என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *