Share on Social Media


லக்னோ-உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பிராமணர்களின் ஆதரவை பெறுவதற்கான பிரசாரத்தை, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, வரும் 23ல் துவக்கவுள்ளார்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வருமான மாயாவதி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:பா.ஜ.,வின் பொய் பிரசாரத்தை நம்பி கடந்த தேர்தலில் அக்கட்சிக்கு பிராமணர்கள் ஓட்டளித்தனர். தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை இப்போது உணர்ந்து உள்ளனர்.

latest tamil news

பிராமணர்களை மீண்டும் தவறாக வழிநடத்த பா.ஜ.,வை அனுமதிக்க மாட்டோம். பிராமணர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களின் ஆதரவை பெறும் நோக்கில் அயோத்தியிலிருந்து வரும், 23ல் பிரமாண்ட பிரசாரத்தை துவக்க உள்ளோம். பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, மாநிலத்தில் பகுஜன் சமாஜ் ஆட்சி அமைய வேண்டும் என, அவர்களிடம் பிரசாரம் செய்வோம். விவசாய சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *