Share on Social Media


புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி – பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார்.

ஐரோப்பிய யூனியனின், 27 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக சமீபத்தில் உரையாடினார்.இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன், தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாடினார். அப்போது, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். இருநாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து இருவரும் திருப்தி தெரிவித்தனர்.

கொரோனா காலத்தில், இந்த உறவை மேலும் வலுபெற செய்ய, தலைவர்கள் உறுதி பூண்டனர். இந்தியா – பிரான்ஸ் இடையே, சீரான மற்றும் விரிவான தடையற்ற வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான பேச்சை மீண்டும் துவங்குவது குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர். கொரோனா அச்சுறுத்தல் ஓய்ந்த பிறகு, இந்தியாவுக்கு வருமாறு பிரான்ஸ் அதிபருக்கு மோடி அழைப்பு விடுத்தார்.இந்த தகவல்களை, பிரதமர் அலுவலக செய்தி குறிப்பு நேற்று உறுதி செய்தது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *