Share on Social Media


மலையாள சினிமா உலகில் பிரபலமான நடிகர் முகேஷ். ‘ஐந்தாம் படை’ ‘ஜாதிமல்லி’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் இருந்து அரசியலுக்குப்போன நடிகர் முகேஷ் இப்போது சி.பி.எம் கட்சியில் இருக்கிறார். அதுமட்டுமல்லாது கேரள மாநிலம் கொல்லம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் இப்போது இருக்கிறார். இவர் சினிமா நடிகை சரிதாவை முதலில் திருமணம் செய்துகொண்டார். பின்னர் முகேசும், சரிதாவும் தனித்தனியாக பிரிந்து சென்றனர்.

முதல் திருமணம் விவகாரத்து ஆன பிறகு 2013-ல் மேதில் தேவிகா என்ற டான்சரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் நடிகர் முகேஷ். டான்சர் மேதில் தேவிகாவிற்கும் அது இரண்டாவது திருமணம்தான். சுமார் எட்டு ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். இந்த நிலையில் நடிகர் முகேசை விட்டு பிரிய உள்ளதாகவும், அதற்காக முறைப்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் மேதில் தேவிகா கூறியிருந்தார். நடிகரும் எம்.எல்.ஏ-வுமான முகேசை அவரது இரண்டாவது மனைவி மேதில் தேவிகா விவகாரத்து செய்ய உள்ளது குறித்து பரபரப்பான செய்திகள் வெளியானது.

சினிமா நடிகர் முகேஷ் - டான்சர் மேதில் தேவிகா

சினிமா நடிகர் முகேஷ் – டான்சர் மேதில் தேவிகா

இதுபற்றி கருத்து தெரிவித்த மேதில் தேவிகா, “முகேஷ் நல்ல மனிதர். அன்புகாட்டுவதில் சிறந்தவர். ஆனால் வாழ்க்கையில் நல்ல கணவராக இருக்கவில்லை. குடும்ப வாழ்க்கையை நல்லபடியாக கொண்டுசெல்ல முடியவில்லை. எட்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தும் அவரை புரிந்துகொள்ள முடியவில்லை. விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் கொடுத்துள்ளேன். கோப்பட்டு பிரிய வேண்டிய அவசியம் இல்லை. என் வாழ்க்கையின் பெரிய மனிதர் அவர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *