Share on Social Media


புதுடில்லி: இரண்டு நாள் பயணமாக டில்லி சென்றுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்துள்ளார்.

உ.பி.,யில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ‘கோவிட் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை யோகி ஆதித்யநாத் அரசு சரியாக கையாளவில்லை’ என, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும், யோகி ஆதித்யநாத் மீது பா.ஜ., தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகின. இது தொடர்பாக உ.பி., மாநிலத்துக்கான கட்சியின் மேலிட பொறுப்பாளர் ராதா மோகன் சிங், கட்சி யின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனால், முதல்வர் பதவியிலிருந்து ஆதித்யநாத் மாற்றப்படலாம் என, தகவல்கள் வெளியாயின.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத், 2 நாள் பயணமாக டில்லி சென்றுள்ளார். நேற்று (ஜூன் 10) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த ஆதித்யநாத், மாநில அமைச்சரவையை மாற்றியமைப்பது பற்றி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து, உ.பி., தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. தொடர்ந்து, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்தித்தார். யோகி ஆதித்யநாத் மீது பா.ஜ., தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *