Share on Social Media


புதுடில்லி: 2001 அக்.,7ல் குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற மோடி, 13 ஆண்டுகள் முதல்வர், 7 ஆண்டுகள் பிரதமர் என தொடர்ந்து 20 ஆண்டுகளை ஆட்சித் தலைமையில் பூர்த்திச் செய்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பா.ஜ., தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடியின் 30 ஆண்டுகால நண்பரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா அவரை வாழ்த்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், மோடி குஜராத்தின் முதல்வராகப் பதவியேற்றார். வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கான பயணம் அங்கிருந்து தொடங்கி, இன்றுவரை தொடர்கிறது. இந்த 20 ஆண்டுகளில், மக்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக இரவும் பகலும் கடினமாக உழைத்து மோடி உச்சத்தை அடைந்தார்.” என கூறியுள்ளார்.

மேலும் அப்பதிவுடன், பிரதமர் மோடி 2001, 2002, 2007, 2012 ஆகிய ஆண்டுகளில் முதல்வராக பொறுப்பேற்றது மற்றும் 2014, 2019-ல் பிரதமராக பொறுப்பேற்றக் கொண்ட தருணங்களை, வந்தே மாதரம் பின்னணி இசையுடன் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

கறைபடியாதவர்!

பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா வெளியிட்ட அறிக்கையில், “மத்திய, மாநில அரசுகளின் தலைவராக 20 ஆண்டுகளை பொதுச் சேவையில் நிறைவு செய்யும் உயர்ந்த தலைவர் மோடியை மனதார வாழ்த்துகிறேன். நாட்டை ஏமாற்ற சூழ்நிலையிலிருந்து வெளியேற்றி, முன்னேற்றப் பாதைக்கு திருப்பிய விஷ்வ குரு மோடி” என புகழ்ந்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பதிவில், “இந்த 20 வருடங்கள் மக்கள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், கறைபடியாதவையாகவும் இருந்தன. அவரது புகழ் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இன்னமும் வளரும்.” என வாழ்த்தியுள்ளார்.

Advertisement





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *