Share on Social Media


பிரதமரை காணவில்லை!

கொரோனாவுக்கான தடுப்பூசிகள், ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றுடன் சேர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும் காணாமல் போய்விட்டார். புதிய பார்லி மென்ட் கட்டுமான திட்டமும், பிரதமரின் புகைப்படங்களும் மட்டும் தான் மீதம் உள்ளன.

ராகுல்

லோக்சபா எம்.பி., – காங்.,

இலவச கல்வி!

கொரோனா வைரசால் பெற்றோர்களை இழந்து தனித்து விடப்பட்ட குழந்தைகளுக்கு, இலவச கல்வி வழங்கப்படும். அவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்களும் வழங்கப்படும். அவர்களுக்கு நிதியுதவியாக மாதம், 5,000 ரூபாய் அளிக்கப்படும்.

சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,

களங்கம் ஏற்படும்!

கொரோனா தடுப்பூசிகளை பெற மாநில அரசுகள், சர்வதேச சந்தைகளில் கடுமையாக மோதிக் கொள்கின்றன. மஹாராஷ்டிராவை எதிர்த்து, உத்தர பிரதேச அரசும், டில்லியை எதிர்த்து ஒடிசாவும் சண்டையிடுகின்றன; இது இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி முதல்வர்,ஆம் ஆத்மி

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *