Share on Social Media


சென்னை: ‘தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மழை பாதிப்பிற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும்’ என பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சென்னையில் உள்ள பெரும்பாலான இடங்கள் மற்றும் புறநகர் பகுதிகள் தொடர் மழையால் நீரால் சூழ்ந்துள்ளன. தெருக்களில் மழைநீர் தேங்கி வெள்ள பாதிப்பு சூழல் உள்ளது.

மேலும், வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என அறிவித்துள்ளது. மழையினால் பாதிப்படைந்த குடிசைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பொது சொத்துகளை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும். எனவே ஒன்றிய நிதி அமைச்சகத்துக்கு தாங்கள் அறிவுரைகள் வழங்கி தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *