Share on Social Media


புதுடில்லி : ”உலகில் அமைதி நிலவ வேண்டுமானால், ஒவ்வொரு நாடும், தன் நடவடிக்கைகளில், சுய கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்; பிரச்னை தீவிர மடையாத வகையிலும் நடக்க வேண்டும்,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.’ஆசியான்’ எனப்படும், தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் மற்றும் இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகள் அடங்கிய, ‘ஏ.டி.எம்.எம்., பிளஸ்’ எனப்படும், ஆசியான் ராணுவ அமைச்சர்கள் மாநாடு, நேற்று நடந்தது.

இதில், ஆசியான் அமைப்பைச் சேர்ந்த, 10 நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் பங்கேற்றனர்.இந்தியா – சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த, ஏழு மாதங்களுக்கு மேலாக, இரு நாட்டு ராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். பல சுற்று பேச்சு நடத்தியும், படைகளை விலக்கி கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் நடந்த இந்த மாநாட்டில், சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல், பா.ஜ., மூத்த தலைவரும், நம் ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது:
தற்போது இந்த பிராந்தியத்தில், பல நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு உள்ளது.

நாம் பரஸ்பரம் நம்பிக்கை, மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நம் ஒவ்வொரு செயலி லும், சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும். அதேநேரத்தில், பிரச்னைகள் தீவிரமாகாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்; அதுதான், அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கும்.
சர்வதேச சட்ட விதிமுறைகள் மீறல், கடல் பாதுகாப்பு, பயங்கரவாதம் என, பல பிரச்னைகள், சவால்கள் நம் முன் உள்ளன. இவற்றை, நாம் ஒரு குழுவாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.’வசுதைவக குடும்பகம்’ எனப்படும், இந்த உலகமே ஒரு குடும்பம் மற்றும் ‘சர்வோ சுகினா பவந்து’ எனப்படும் அனைருக்கும் அமைதி ஆகியவை, இந்தியாவின் அடிப்படை கொள்கைகள்.
நாம் மற்றவர்களை மதிப்பது, வெளிப்படையாக திறந்த மனத்துடன் செயல்படுவது ஆகியவை இதில் அடங்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *