Share on Social Media


ஷிவமொகா-”பிட்காயின்’ முறைகேட்டின் முக்கிய புள்ளியான ஸ்ரீகிருஷ்ணா உடன் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது,” என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.பிட்காயின் முறைகேடு விஷயத்தில் நாளுக்கு நாள் திருப்பம் ஏற்பட்டு வருகிறது. பா.ஜ., காங்கிரஸ் மாறி, மாறி குற்றஞ்சாட்டிகொள்கிறது.இது குறித்து உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா ஷிவமொகாவின் சாகரில் நேற்று கூறியதாவது:பா.ஜ., மீது குற்றஞ்சாட்ட காங்கிரசாருக்கு எந்த விஷயமும் கிடைக்காதால், பிட்காயின் விஷயத்தில் ஏதோ ஆகிவிட்டதாக புலம்புகின்றனர்.இந்த முறைகேட்டில் பா.ஜ.,வின் எந்த தலைவரும் ஈடுபடவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது, யுபி சிட்டியில் நடந்த ஒரு சண்டையின் போது, அக்கட்சியின் ஒரு தலைவரின் மகனுடன் பிட்காயின் ஸ்ரீகிருஷ்ணா காணப்பட்டார்.அதன் பின், கோவாவில் காங்., முன்னாள் எம்.எல்.ஏ., மகனுடன் போதைப்பொருள் விஷயத்தில் சிக்கினார்.அவரை விசாரித்த போது, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்யாமல் விட்டு விட்டனர்.ஆன்லைனில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடந்தது. ஒரே நபருக்கு அதிக ஓட்டுகள் வந்ததால், ‘ஹாக்’ செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது ஒரு வேட்பாளருடன் தொடர்பில் இருந்தும், போலீசில் புகார் அளிக்கவில்லை.காங்கிரசாருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்திருந்தால் அப்போதே புகார் அளித்திருப்பர்.ஒரு பிட காயின் மதிப்பு 49 லட்சம் ரூபாய் என்றும், 5,000 பிட்காயின்கள் ஹாக் செய்யப்பட்டுள்ளதாக காங்., தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது உண்மை என்றால் பணம் பறிபோனவர்கள் புகார் அளித்திருப்பர் அல்லவா.பிட்காயின் முறைகேட்டின் முக்கிய புள்ளியான ஸ்ரீகிருஷ்ணா உடன் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *