Share on Social Media


புதுச்சேரி : புதுச்சேரி மாநில பா.ம.க., புதிய நிர்வாகி கள் அறிமுகம், மற்றும் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.வழுதாவூர் சாலையில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பா.ம.க., மாநில அமைப்பாளர் கணபதி, அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் வடிவேல், மதியழகன், துரை பிரபாகரன் பதவியேற்றுக் கொண்டனர்

.மாநில வன்னியர் சங்க செயலாளர் முருகன், மண்டல செயலாளர் சிவா, மாநில இளைஞர் அணி செயலாளர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அரசியல் ஆலோசனை குழு தலைவர் தீரன், புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து, பேசியதாவது:புதுச்சேரி பா.ம.க., வுக்கு புதிய ரத்தம் பாய்ச்ச புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மக்கள் தொகையில் 65 சதவீதத்திற்கு மேல் வன்னியர்கள் உள்ளனர்.

யார் ஆட்சியில் இருந்தாலும், அவர்கள் வெற்றி பெற வன்னியர்கள் ஓட்டு பெரிதும் உதவி செய்துள்ளது. எங்கள் நோக்கம் புதுச்சேரியில் பா.ம.க., ஆட்சி அமைக்க வேண்டும்.முதல்வர் ரங்கசாமி வன்னியர் என்றாலும், அவர் வேறு கட்சியை சேர்ந்தவர். நம் கட்சியை சேர்ந்தவர்கள் முதல்வராக வேண்டும். புதுச்சேரியை முன்மாதிரியான மாநிலமாக மாற்ற வேண்டும். இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாநில அமைப்பாளர் கணபதி பேசுகையில்,’ புதுச்சேரியில் பா.ம.க., சிறந்த கட்சியாக மாறப் போகிறது. மத்திய அரசு புதுச்சேரியை தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலை தொடர்ந்தால், மாநில பிரச்னைக்காக பா.ம.க., போராடும். கட்சி தொண்டர்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு, கருத்துக்களை தெரிவிக்கலாம். அதனை கேட்டு செயல்படுவேன்’ என்றார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *