Share on Social Media


மும்பை: பா.ஜ.,வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், கூட்டணியிலிருந்து விலகினாலும், பிரதமர் மோடி எங்களது எதிரி அல்ல எனவும் சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பா.ஜ.,வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் சிவசேனா, தாக்கரே குடும்பத்திற்கு பிரதமருடனான உறவு மரியாதைக்குரியது; அன்பு நிறைந்தது. அவர் நாட்டின் பிரதமர். அவருடன் எங்களுக்குத் தனிப்பட்ட சண்டை எதுவும் இல்லை. கூட்டணியிலிருந்து நாங்கள் விலகினோம். அதற்காக அவர் எங்களது எதிரி என்றாகிவிடாது. அவர் நாட்டின் தலைவர். மஹாராஷ்டிராவுக்கு அவர் தேவை. மாநிலம் இக்கட்டான நிலையிலிருக்கும்போது அவர் உதவுவார்.

மஹாராஷ்டிர வளர்ச்சி கூட்டணி (சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி) நாட்டில் சிறந்தது. இந்த கூட்டணி 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவுசெய்யவே அமைக்கப்பட்டது. அதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மூன்று வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்துள்ளன. அது இரண்டு ஆண்டுகள் நிறைவுசெய்துவிட்டது. இந்த ஆட்சி 10 நாள்களில் கவிழ்ந்துவிடும் என எதிர்க்கட்சி பேசி வந்தது. இருந்தபோதிலும், இந்தக் கூட்டணி 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மேற்கொண்டு 3 ஆண்டுகால ஆட்சியையும் நிறைவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *