Share on Social Media


பாலக்காடு:”பா.ஜ.,வின் வளர்ச்சியை பார்த்து பிற கட்சிகள் அச்சத்தில் உள்ளன,” என, நடிகை குஷ்பு பேசினார்.

கேரள மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் தலைமையில், தேர்தல் பிரசார பயணமாக, ‘விஜய் யாத்திரை’ நடந்து வருகிறது. பாலக்காட்டில் நடந்த நிகழ்ச்சியில், நடிகை குஷ்பு பேசியதாவது: தமிழகத்திலும், கேரளாவிலும் பா.ஜ., எழுச்சியை காண முடிகிறது. பா.ஜ., வளர்ச்சியை பார்த்து, பிற கட்சிகள் அச்சமடைந்துள்ளன.

பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், தங்கள் ஊழல் வெளிச்சத்துக்கு வரும் என, கம்யூ., காங்., கட்சிகள் அஞ்சுகின்றன.கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் அரசு, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள திட்டங்களை, ‘நாங்கள் தான் செய்தோம்’ என, உரிமை கொண்டாடி, அரசியல் ஆதாரம் பெற முயல்கிறது.காங்., கட்சியை பொறுத்தவரை, வாரிசு அரசியலுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நாட்டின் வளர்ச்சியை விட தங்கள் வளர்ச்சியை தான், பிரதானமாக கருதுகின்றனர்.பிரதமர் மோடியின் கையில் நாடு பாதுகாப்பாக இருப்பதால் தான், ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன் போன்றோர் பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர்.இவ்வாறு, குஷ்பு பேசினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *