Share on Social Media


கோல்கட்டா-மேற்கு வங்கத்தில் பா.ஜ., நிர்வாகி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். ‘இது திரிணமுல் காங்., ரவுடிகளின் செயல்’ என, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சியில் உள்ளது. இங்குள்ள வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மிதுன் கோஷ். மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி செயலர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே நின்றிருந்த அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

கொலையின் பின்னணியில் திரிணமுல் காங்., இருப்பதாக பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து தினாஜ்பூர் மாவட்ட பா.ஜ., தலைவர் பாசுதேப் சர்க்கார் கூறியதாவது:எங்கள் கட்சியின் இளைஞர் அணி மாவட்ட செயலர் மிதுன் கோஷ், ஏற்கனவே தொலைபேசி வாயிலாக மிரட்டப்பட்டார்.

latest tamil news

இதுதொடர்பாக போலீசில் வாய்மொழி புகார் அளித்தோம்; நடவடிக்கை இல்லை.நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவரை வெளியே அழைத்து சுட்டுக்கொன்றுள்ளனர். இதன் பின்னணியில் திரிணமுல் காங்., ரவுடிகள் உளளனர். இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்பூர்வ விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த குற்றச்சாட்டை திரிணமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *