Share on Social Media


தேர்தலுக்கு சில மாதங்களுக்குமுன் மேற்கு வங்கம் கண்ட காட்சிகள் எல்லாம், தற்போது தலைகீழ் நிகழ்வுகளாக மாறியிருக்கின்றன. பா.ஜ.க-வுக்குத் தாவி அதன் தேசிய துணைத் தலைவர் பதவியைப் பெற்ற முகுல் ராய், ஒரு காலத்தில் மம்தாவின் வலதுகரமாகத் திகழ்ந்தவர். சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை மம்தா பெற்றதைத் தொடர்ந்து, 44 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மம்தாவிடம் திரும்பி வந்திருக்கிறார். தற்போது அவர் பா.ஜ.க-வின் எம்.எல்.ஏ-வும்கூட. அவர் மட்டுமல்ல… யார் யாரெல்லாம் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பா.ஜ.க-வுக்கு ஓடினார்களோ, அவர்கள் இப்போது ரிவர்ஸ் கியரில் திரிணாமுல் காங்கிரஸுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க முகாம் அலறுகிறது.

ஜகதீப் தங்கர்

ஜகதீப் தங்கர்

2020-ல் அம்பன் புயல்… 2021-ல் யாஸ் புயல். அம்பன் புயல் நேரத்தில் பிரதமர் மோடி வந்தபோது முகத்தைத் திருப்பிக்கொண்ட மம்தா பானர்ஜி, யாஸ் புயல் பாதிப்புகள் தொடர்பான ஆலோசிப்பதற்காக வந்தபோது, தனக்கு வேறு வேலை இருப்பதாகச் சொல்லி புறப்பட்டுப் போய்விட்டார். இதுபோல சில சந்தர்ப்பங்களில் பிரதமர் மோடியைத் தெறிக்கவிட்டவர் கேரள முதல்வர் பினராயி விஜயன். கடந்த ஆண்டு ஒருசம்பவம். காணொலியில் பிரதமர் கூட்டம். முதல்வர்கள் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பிரதமருடன் மாநில அதிகாரிகள்தான் பேச வேண்டும் என்று சொல்லப்பட்டது.

ஆகவே, ‘அப்படியென்றால், என் தலைமைச்செயலாளர் மட்டும் பங்கேற்பார்’ என்று வெளியே போய்விட்டார் பினராயி விஜயன். மம்தா பானர்ஜியோ, ஒரு படி மேலே போய், யாஸ் புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி வந்திருந்தபோது, தன் தலைமைச்செயலாளருக்கும் வேறொரு வேலை இருக்கிறது என்று கூட்டிபோய்விட்டார். இவ்வளவு தூரம் ஒரு பிரதமரை அவமதிக்கலாமா என்ற ஆதங்கக் குரல்கள் எழுந்தன. ஆனால், மூன்றாவது முறையாக முதல்வராக வெற்றிபெற்றிருக்கும் மம்தா பானர்ஜி, அதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்கும் நிலையில் இல்லை. பிரதமர் கூட்டத்தைப் புறக்கணித்த தலைமைச்செயலாளரை மத்திய அரசுப் பணிக்குத் திரும்புமாறு தேதி குறித்து கெடுவிதித்தது மத்திய பா.ஜ.க அரசு. அந்த மிரட்டலுக்கெல்லாம் மம்தா அசரவில்லை. சில நாள்களில் ஓய்வுபெற்ற அந்த அதிகாரியை தன் சிறப்பு அதிகாரியாக பணியமர்த்திக்கொண்டார் மம்தா. அதற்கு மேல் இந்த விவகாரத்தில் மோடி அரசால் எதுவும் செய்ய முடியவில்லை.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *