Share on Social Media


ஆனால் பா.ஜ.க-வினரோ இந்த குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்கள். இதுபற்றி பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், “பணத்தை கொள்ளையடித்தவர்கள் சி.பி.எம் கட்சியை சேர்ந்தவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு வழக்கை திசை மாற்றுகின்றனர். எங்களுக்கும் அந்த பணத்துக்கும் சம்பந்தம் இல்லை” என்கிறார். அதே சமயம் இந்த விவகாரம் குறித்து கட்சி ரீதியாக விசாரணை நடத்த மூன்றுபேர் குழுவை ஏற்படுத்தியுள்ளது பா.ஜ.க டெல்லி தலைமை.

கே.சுரேந்திரன்

கே.சுரேந்திரன்

பா.ஜ.க-வின் பண விவகாரம் கேரள சட்டசபையிலும் எதிரொலித்தது. “சட்டசபையை நிறுத்தி வைத்துவிட்டு பா.ஜ.க-வின் பண விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்” என எதிர்கட்சியான காங்கிரஸ் மனு அளித்தது. கடந்த 7-ம் தேதி இதற்கு பதிலளித்து சட்டசபையில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “பண விவகாரம் குறித்து டி.ஐ.ஜி தலைமையில் தனி டீம் விசாரணை நடத்தி வருகிறது. 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1.12 கோடி ரூபாயும், தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 96 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இந்த வழக்கு சம்பந்தமாக கேரள போலீஸிடம் கேட்டிருந்த ஆவணங்கள் கடந்த ஜூன் ஒன்றாம் தேதியே வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

கடந்த சி.பி.எம் ஆட்சியில் ஸ்வப்னா சுரேஷ் தங்கம் கடத்தல் வழக்கு போல இந்த முறை பா.ஜ.க மீதான வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *