Share on Social Media


பா.ஜ.க., அகாலி தளம் கட்சிகளுக்குள் ஏற்பட்ட கூட்டணிப் பிளவும் தேர்தல் தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணமாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“இதுவரை பஞ்சாபில் தனித்தே போட்டியிடாத பா.ஜ.க தங்களின் பலத்தை சுயபரிசோதனை செய்யவும் முறிந்து போன கூட்டணியைச் சரி செய்யவும் எந்த முயற்சியும் செய்யவில்லை. பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டபின் அகாலி தளத்துக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்புக் கிடைக்கவில்லை. மக்கள் தற்போதும் அகாலி தளத்தை பா.ஜ.க-வின் மற்றொரு வடிவமாகே பார்க்கிறார்கள். அடுத்த ஆண்டு வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன், சீக்கியர்கள் மீது அதிருப்தியில் உள்ள அமைப்பினர், மக்களை ஒன்றிணைத்து அவர்களை தங்களுக்கான வாக்குகளாக பா.ஜ.க மாற்றிக்கொள்ள வேண்டும். 32% உள்ள பல்வேறு பிரிவைச் சேர்ந்த தலித் மக்களின் நம்பிக்கையையும் பா.ஜ.க-வினர் பெற்றாக வேண்டும்.

சீக்கியர்களின் நம்பிக்கையைப் பெறுவதை விட ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடக்க உள்ள ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள இந்து ஜாட் அமைப்பினரின் நம்பிக்கையை பெறுவதிலேயே முழுக் கவனமும் செலுத்தியது பா.ஜ.க-வின் தோல்விக்கு மற்றுமொரு காரணமாகப் பார்க்கப்படுகிறது” என்கின்றனர்…



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *