Share on Social Media


புதுடில்லி : ”அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின் மீதான ஊழல் கறை பா.ஜ. அரசால் சலவை செய்யப்பட்டு விட்டதா?” என காங். – எம்.பி. ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங். தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்தபோது ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த ‘அகஸ்டா வெஸ்லாண்ட்’ நிறுவனத்திடம் இருந்து 3500 கோடி ரூபாய் மதிப்பில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க 2010ல் ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தை அளிக்க அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் விமானப் படை அதிகாரிகளுக்கு 360 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவன தயாரிப்புகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில் அந்த கொள்முதல் தடையை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ. அரசு சமீபத்தில் நீக்கியது.இந்த நடவடிக்கை குறித்து காங். தலைவர்கள் கடும் விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.

காங். – எம்.பி. ராகுல் கூறியுள்ளதாவது:
அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் நிறுவனம் என பா.ஜ. முன்னர் குற்றஞ்சாட்டியது. இப்போது அந்த நிறுவனத்தின் ஊழல் கறை பா.ஜ. அரசால் சலவை செய்யப்பட்டு விட்டதா?
இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *