Share on Social Media

ஒருவேளை, என் பாஸ் `அப்படி ஒண்ணும் பெரிய தப்பு பண்ணிடலை’ என்று நான் நினைத்து `கொஞ்சம் பொறுத்துப் போயிருந்தால்’ அடுத்து என்ன நடந்திருக்கும்? அவர் தந்த பாலியல் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டே இருந்திருக்கும்; நான் மன அழுத்தத்தில் தள்ளப்பட்டிருப்பேன். அவருக்கு சாதகமாக அமைந்த ஒரு தனிமை சந்தர்ப்பத்தில் எனக்கு அடுத்தகட்ட விபரீதங்கள் நிகழ்ந்திருக்கலாம். இப்போது என்னிடம் விலகிச் செல்லும் இதே அலுவலக நண்பர்கள் அப்போது என்னிடம் வந்து, `முன்னரே சொல்லியிருக்கலாம்ல…’ என்று அறிவுரை வழங்க வருவார்கள்.

Woman

Woman
Image by StockSnap from Pixabay

இப்படி என் பக்க நியாயங்களை எல்லாம் நான் சொன்னபோது, `அவ ரொம்ப ஓவரா பேசுறா…’ என்று இன்னும் அதிகமாக என்னிடமிருந்து விலகிவிட்டார்கள் அலுவலகத் தோழமைகள். பணியிடத்தில் நான் தனித்துவிடப்பட்டதுபோல உணர்கிறேன். வேலையை ரிசைன் செய்துவிட்டு வேறு வேலை பார்த்துச் செல்லலாம் என்று நினைக்கிறேன்தான். ஆனால், யாரோ செய்த தவறுக்கு நான் ஏன் வேலையை விட வேண்டும்? பின்னர், `இப்டித்தான் அவ கம்ப்ளெயின்ட் கொடுத்தா, கடைசியில அவளே வேலையைவிட்டுப் போகும்படி ஆகிடுச்சு’ என்று மற்றவர்கள் பேசும் வகையில் நான் பிற பெண்களுக்கு மோசமான முன்னுதாரணம் ஆகிவிட மாட்டேனா?

பாலியல் தொல்லையை தைரியமாகப் புகார் அளித்தது குற்றமா என்ன? இந்தச் சூழலை எப்படி கையாள்வது நான்?

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *