Share on Social Media


பாலா- சூர்யா இணையும் படத்தின் வேலைகள் வேகம் பிடித்திருக்கிறது. இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் மட்டுமே இப்போது கமிட் ஆகியிருக்கிறார்கள். ‘நந்தா’, ‘பிதாமகன்’, படங்களுக்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கான வேலைகள் துவங்கி விட்டன. இதற்காக சமீபத்தில் பெரியகுளத்திற்கு சென்று, ஸ்கிரிப்ட் வேலைகளில் மூழ்கி வந்த பாலா, இப்போது சென்னையில் எஸ்.ராமகிருஷ்ணனுடன் இணைந்து திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஜனவரியில் தொடங்கப்படலாம் என்றிருந்த இதன் படப்பிடிப்பை வருகிற மார்ச் மாதத்திற்குத் தள்ளி வைத்திருக்கிறார் சூர்யா. அவர் இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்திருக்கிறார்.

பாலா - சூர்யா

பாலா – சூர்யா

அந்தப் படம் வரும் பிப்ரவரியில் ரிலீஸ் ஆகிறது என்பதால் அதன் டப்பிங் வேலைகள் மற்றும் புரமோஷன் வேலைகள் சூர்யாவுக்கு இருப்பதால் பாலாவின் படப்பிடிப்பை மார்ச்சிற்கு மாற்றியிருக்கிறார்.

சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்ற தகவலை தயாரிப்பு தரப்பு மறுத்துவிட்டது. கதை விவாதம் முழுவதும் முடிந்த பிறகே கதாநாயகிக்கான தேர்வு நடக்கவிருக்கிறது என்கிறார்கள். ஆனால், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் முடிவாகி வருகின்றனர். ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியமும், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷும் உறுதியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.