Share on Social Media


கோவை: தற்போது நிறுத்தப்பட்டுள்ள பாலக்காடு – திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயிலை, மேட்டுப்பாளையம் வரை நீட்டித்து, மீண்டும் இயக்க வேண்டும். இதன் வாயிலாக, மாவட்டத்தில் உள்ள ஆன்மிக மையங்களை இணைக்க முடியும். சுற்றுலா வருவாயை ரயில்வே பெருக்க முடியும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் தங்கியுள்ள தென்மாவட்ட மக்கள் பண்டிகையின் போதும், விழாக்காலங்களிலும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல, மிகவும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.பல ஆண்டுகளாகதென் மாவட்டங்களை கோவையுடன், 10 ரயில்கள் இணைத்து வந்தன. 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட கோவை — திண்டுக்கல் வரையிலான ரயில்பாதை அகலப்படுத்தும் பணிகள் முடிந்து, பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனால், மீட்டர்கேஜ் ரயில் பாதையாக இருந்த போது இயக்கப்பட்ட பல ரயில்கள், இன்னும் இயக்கப்படவில்லை.தற்போது, கோவை – பொள்ளாச்சி, கோவை – பழனி – மதுரை, பொள்ளாச்சி – பாலக்காடு இடையே ரயில்கள் இயக்கப்படுகின்றன.இருப்பினும் ராமேஸ்வரம், நாகர்கோவில், துாத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு, ரயில்கள் இயக்கம் குறித்து அறிவிப்புகள் இல்லை.

இந்த ரயில்களை உடனடியாக இயக்க, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அத்துடன், நிறுத்தப்பட்டுள்ள பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்துார் வரை இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலை, மேட்டுப்பாளையம் வரை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

ஆன்மிக சுற்றுலா பெருகும்பயணிகளுக்கான பலன் ஒரு புறம் இருந்தாலும், ரயில்வே நிர்வாகத்துக்கான வருவாய் அதிகரிக்கும். இந்த ரயில் ஆன்மிக சுற்றுலாவுக்கு வழிவகுக்கும்.அறுபடை வீடுகளான திருச்செந்துார், பழனி ஆகிய இரு ஆன்மிக தலங்களுக்கு ஒரே நாளில் பக்தர்கள் செல்ல முடியும்.

அதேபோல், கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மருதமலை,மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், காரமடை அரங்கநாதர் கோவில் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு, பக்தர்கள் செல்ல முடியும்.இதுதவிர, ஊட்டி, வால்பாறை, டாப்சிலிப் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் பயணிகள் செல்ல ஏதுவாகும். இதைக்கருத்தில் கொண்டு பாலக்காடு – திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சேலம் கோட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜெயராஜ் கூறுகையில், ”இந்த ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கும் போது, ரயில்வே நிர்வாகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். ஏராளமான பயணிகளும் பயனடைவர். ஆன்மிகம், சுற்றுலா வளர வாய்ப்பு ஏற்படும். இதைக்கருத்தில் கொண்டே ரயில்வே சேவைக்குழுவிடம் மனு அளித்துள்ளோம். அந்த ரயிலை ‘வெற்றிவேல் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் இயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம். தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்,” என்றார்.பா.ஜ., ஆட்சியில் இதைக்கூடவா செய்யாமல் இருப்பார்கள்?



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *