Share on Social Media


புதுடில்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது தொடர்பாக, பார்லிமென்டில் நாளை (டிச.,09) அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் வெல்லிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்திற்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர், காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் என்ற இடத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. அதில் 13 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இறந்தவர்கள் அடையாளம் காண்பதற்காக டி.என்.ஏ., பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக பார்லிமென்டில் நாளை (டிச.,09) அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக டில்லி வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *