Share on Social Media


புதுடில்லி: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க., எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதேபோல், அமளி காரணமாக ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த நவ.,29ல் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியது. பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக பார்லிமென்ட் ஒத்திவைக்கப்படுகிறது.

இந்நிலையில், பார்லி கூட்டத்தொடர் நிறைவு பெற 3 நாட்கள் உள்ள நிலையில், இன்று(டிச.,21) நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறி, லோக்சபாவில் தி.மு.க., எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். லக்கம்பூர் கெரி சம்பவம் மற்றும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து லோக்சபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

latest tamil news

ராஜ்யசபா காலை துவங்கியதும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ‘ஆதார்’ எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா – 2021 தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், எந்த நிகழ்ச்சியும் நடைபெறாமல், பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் பேரணி

latest tamil news

அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், லக்கம்பூர் கெரி சம்பவத்தை கண்டித்தும், அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் பார்லிமென்ட் வளாகத்தில், எதிர்க்கட்சியினர் பேரணி சென்றனர். காங்கிரஸ் எம்.பி., ராகுல் தலைமையில் நடந்த இந்த பேரணியில் தி.மு.க., சிவசேனா உள்ளிட்ட கட்சி எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *