Share on Social Media


மீன்பிடிக்க சென்ற பாம்பன் பகுதி மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பன் பகுதி விசைப்படகுகள்

பாம்பனிலிருந்து 300 விசைப்படகுகளில் 1000-க்கும் அதிகமான மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர்.இந்திய எல்லைப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது பாட்டில்களையும் கற்களையும் வீசி விரட்டியுள்னர்.

அதைத்தொடர்ந்து அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த படகுகள் மீது துப்பாக்கி சூடும் நடத்தியதால் திடீர் தாக்குதலை எதிர்பாராத மீனாவர்கள் பதறியபடி அங்கிருந்து கிளம்பியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பாம்பன் மீனவர்களின் படகுகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளது. துப்பாக்கி குண்டுக்கு பலியாகாமல் 9 மீனவர்கள் தப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

IMG 20210625 WA0013 Tamil News Spot
படகில் பாய்ந்த துப்பாக்கி குண்டு

தங்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல், துப்பாக்கி சூடு பற்றி காவல்துறை, மீன்துறை அதிகாரிகளிடம் தப்பித்து வந்த மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் படகில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகளை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கரை திரும்பிய மீனவர்கள், ”மீன்பிடி தடை காலம் முடிந்து இப்போதுதான் கடலுக்கு செல்கிறோம். கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் எங்களை வாட்டி எடுக்க, டீசல் விலை உயர்வு இன்னொரு பக்கம் நெருக்க பல கஷ்டங்களுக்கிடையே கடலுக்கு செல்லும் நேரத்தில் இலங்கை கடற்படை இப்படி அட்டூழியம் செய்துள்ளது. நம் நாட்டு எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது தாக்குதலை இலங்கை கடற்படை நடத்தியுள்ளது.

IMG 20210625 WA0033 Tamil News Spot
துப்பாக்கி குண்டு தாக்கிய விசைப்படகு

நாட்டுக்கு பலகோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய எங்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. நாங்கள் நிம்மதியாக தொழில் செய்ய மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்கவேண்டும்.” என்றனர் .மீனவர்களின் குற்றச்சாட்டுக்கு இலங்கை அரசு எந்த பதிலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *