கள்ளக்குறிச்சி-மாவட்டத்தின், தலைமைக் காவல் நிலையமாக விளங்கும் கள்ளக்குறிச்சியில், போலீஸ் பற்றாக்குறையால் பாதுகாப்பு பணிகள் மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் கடந்த 1924ம் ஆண்டு துவங்கப்பட்டது. துவக்கத்தில் அப்போதைய மக்கள் தொகைக்கேற்ப 2 இன்ஸ்பெக்டர்கள், 2 சப் இன்ஸ்பெக்டர், 30 போலீசார் என 34 பேர் நியமிக்கப்பட்டனர்.கள்ளக்குறிச்சியின் அசுர வளர்ச்சிக்கேற்ப போலீசார்எண்ணிக்கை அதிகரிக்க வேண்டி இருந்தது. அதன்படி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சப் இன்ஸ்பெக்டர்கள் 73 போலீசார் என மொத்தம் 80 பேர் பணிபுரியும் வகையில் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.ஆனால், ஒரு இன்ஸ்பெக்டர், 5 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 59 பேர்மட்டுமே பணியில் உள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டமாக மாறிய நிலையில், மாவட்ட தலைமை காவல் நிலையமாக கள்ளக்குறிச்சி இருந்து வருகிறது. கலெக்டர்அலுவலகம் முன் நாள்தோறும் ஆர்ப்பாட்டம், முற்றுகை மற்றும் மறியல் போராட்டம், பொதுக்கூட்டம் என பல்வேறு நிகழ்வுகள் நடக்கிறது.மேலும் அமைச்சர்கள் வருகை உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளும் அடிக்கடி நடக்கிறது. இதுபோன்றபல்வேறு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது.அதேபோல் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமப்புறங்களில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கள்ளச்சாராயம் விற்பனை போன்ற குற்றநடவடிக்கை, சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், விபத்துகள் போன்ற சம்பவங்களும் தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் போலீஸ் நிலையத்தில் உள்ள 59 போலீசாரில் தற்போது 22 பேர் எஸ்.பி., அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம் போன்ற மற்ற காவல்துறை சம்மந்தமானபல்வேறு இதர பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.இதனால், மீதமுள்ள 37 பேர் மட்டுமே ஸ்டேஷன் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதில், கோர்ட், சம்மன், அரசு மருத்துவமனை பாதுகாப்பு, விபத்து சான்று பெறும் பணிக்கு என சிலர் சென்று விடுகின்றனர். ஒரு சிலர் விடுமுறையில் இருக்கின்றனர்.இதனால், பதியப்படும் வழக்குகளை விரைந்து விசாரிக்கவும், குற்றவாளிகளை பிடிக்க முடியாமலும், அத்துடன் அன்றாட பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதிலும் போலீசார் திணறி வருகின்றனர்.இருக்கும் போலீசாரைக் கொண்டு தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவதால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகும் நிலையில் உள்ளனர்.
மேலும், குற்ற பிரிவுக்கென பல ஆண்டுகளாக இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் என யாரும் நியமிக்கப்படாமலேயே மற்ற போலீசார் மூலமாக பணிகள்நடக்கிறது.தற்போது, மாவட்ட காவல் அலுவலகம் கள்ளக்குறிச்சியில் ஏற்படுத்தப்பட்டு, எஸ்.பி.,யின் நேரடி கண்காணிப்பில் இந்த போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது.மாவட்ட தலைநகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் போலீசார் பற்றாக்குறைபிரச்னைக்கு தீர்வு காண உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement