Share on Social Media


புதுடில்லி: சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கப்படாததை தொடர்ந்து, பாதுகாப்பு தொடர்பான பார்லிமென்ட் குழு கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளிநடப்பு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவுடன் எல்லை பிரச்னை தொடர்பாக மத்திய அரசை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில், நேற்று (ஜூலை 14) பிற்பகல் 3 மணியளவில் பாதுகாப்பு தொடர்பான பார்லிமென்ட் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், சீன விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க ராகுல் அனுமதி கேட்டதாகவும், இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த கூட்டத்தில் இருந்து ராகுல் வெளிநடப்பு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடந்த கூட்டத்தில், சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து பார்லிமென்டில் கேள்வி எழுப்புவது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *