Share on Social Media

ஜமைக்கா: ‛‛இந்திய மக்கள் பாதுகாப்பாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும்,’’ என, யோகன் பிளேக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றில் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மருத்துவமனைகளில் ‛ஆக்சிஜன்’ பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜமைக்கா தடகள வீரர் யோகன் பிளேக், தனது ‛டுவிட்டர்’ பக்கத்தில் ‛மை லெட்டர் இந்தியா’ என்ற தலைப்பில் இந்திய மக்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதில் ‛‛எனது அன்பை இந்தியாவுக்கு அனுப்ப இந்த நேரத்தை எடுத்துக் கொள்கிறேன். நான் பல ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டியை பார்த்து வருகிறேன். நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். இந்தியர்கள் அற்புதமானவர்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இது கடினம் என்று எனக்கு தெரியும். ஆனால் நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்’’ என, தெரிவித்திருந்தார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *