Share on Social Media


சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்களின் பாதிப்பை உணர்த்துகிற வகையில் வருகிற வரும் நவ.22 (நாளை) முதல் நவ.29ம் தேதி வரை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் அளவில் மக்கள் விழிப்புணர்வு பிரசார பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் கதர் குல்லா அணிந்து, மூவர்ண கொடி, கண்டன பதாகைகளையும் தாங்கிக் கொண்டு மக்களிடையே பாஜ அரசுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துகிற வகையில் அணிதிரண்டு பங்கேற்க வேண்டும்.

மக்கள் விரோத பாஜ ஆட்சியின் அவலங்களை பட்டியலிட்டு தயாரிக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடையே காங்கிரஸ் கட்சியினர் விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒன்றிய பாஜ ஆட்சிக்கு எதிராக மக்களிடையே கருத்துகளை திரட்டுவதே இந்த அறப்போராட்டத்தின் நோக்கமாகும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *