Share on Social Media


கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சோனாலி குஹா. இவர் நான்குமுறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில்  இருந்து விலகி பாஜவில் இணைந்தார். பாஜவில் இவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலையில் சோனாலி முதல்வர் மம்தாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், “நான் மிகவும் மனமுடைந்து இந்த கடிதத்தை எழுதுகிறேன். உணர்ச்சிவசப்பட்டு மற்றொரு கட்சியில் சேருவதற்காக தவறான முடிவை எடுத்துவிட்டேன். தண்ணீரின்றி மீனால் வாழ முடியாது. நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. தீதி நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் என்னை மன்னிக்கவில்லை என்றால் என்னால் வாழமுடியாது. மீண்டும் திரும்ப வருவதற்கு  அனுமதியுங்கள்’’ என்றுள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *